
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனின் ‘மந்திரக் கணங்கள் நூல் வெளியீட்டு விழாவின்போது, அரங்கில் கூடி இருந்த மக்களின் வாழ்த்தொலிக்கு மத்தியில், மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ‘சொல்வேந்தர்’ எனும் விருது வழங்கப்பட்டது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் மணிமாறன் ஆகியோர் இந்த விருதுக்கான கேடயத்தை வழங்க, டத்தோஶ்ரீ எம்.சரவணன் சார்பில், மாஹ்ஷா பல்கலைக்கழக வேந்தர் தான்ஶ்ரீ டத்தோ டாக்டர் ஹனிபா விருதைப் கொண்டார்.



