
மலேசியப் பாதுகாப்பு மன்றத்தின் முழு அறிவுறுத்தலைப் பின்பற்றி கோலசிலாங்கூர் இரண்டரை மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும் என்று ஆலயத் தலைவர் கண்ணதாசன் மற்றும் செயலாளர் நாராயணசாமி தெரிவித்தனர். ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பின் போது அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். பத்துமலைத் திருத்தலத்தில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையில் பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியோடு பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி தைப்பூசத் திருவிழா உற்சவத்தை நடத்துவது குறித்து விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் முழு பாதுகாப்போடு தைப்பூசத் திருவிழா நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். எல்லா விதமான காவடிகள் எடுப்பதற்கும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதே போல் அலகு குத்துவதற்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை. முகக்கவசம் அணிய முடியாத காரணத்தால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பால்குடம், காவடி எடுப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.



