
🔊To listen to this news in Tamil, Please select the text.
Everything Everywhere All At once என்ற action திரைப்படத்தில் நடித்ததற்காக மலேசிய நடிகையான Tan Sri Michelle Yeoh சிறந்த நடிகைக்கான Oscar விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளார். Daniel Kwan மற்றும் Daniel Scheinert கூட்டாக இயக்கியிருக்கும் அந்த படம் 11 Oscar விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. அவற்றில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதும் அடங்கும். Oscar விருதுக்கு முன்மொழியப்பட்ட முதல் மலேசிய நடிகையாக மட்டுமின்றி 95 ஆண்டு கால Oscar வராற்றில் முன்னணி நடிகை விருதுக்கு முன்மொழியப்பட்ட முதல் ஆசிய பெண்ணாகவும் Michelle Yeoh விளங்குகிறார். அண்மையில் அவர் 80ஆவது Golden Globe விருதளிப்பு விழாவில் நகைச்சுவை மற்றும் இசைக்கான சிறந்த நடிக்கைக்கான Golden Globe விருதையும் வென்றார்.