30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

ரமலான் காலத்தில் இஸ்லாமியர்கள் பேரீச்சம்பழம் மூலம் நோன்பு துறப்பது ஏன்? ஆரோக்கிய பின்னணி இதுதான்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

பேரீச்சம்பழம் மூலம் நோன்பு துறப்பது எப்பொழுதும் ரமலான் மரபு. ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு முன் பழுத்த பேரீச்சம்பழத்துடன் நோன்பு திறப்பார் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.

Dates

DatesFreepik

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நிச்சயமாக பேரீச்சம்பழத்தில் ஒரு சிகிச்சை உள்ளது” – நபி (ஸல்). ஆம், பேரீச்சம்பழத்தை உட்கொள்வது ஒட்டுமொத்தமாக உடலையும் மனதையும் ஆரோக்கியமான பேண உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்களும்.

ரமலானில் எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்?

இஸ்லாமியர்கள் மூன்று பேரீச்சம்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து இஃப்தார் கொண்டாடுகிறார்கள், நபிகள் நாயகம் முகமது தனது நோன்பை துறந்தபோது செய்தது போல.

Dates

DatesFreepik

ரமலான் மாதத்தில் பேரீச்சம்பழம் முக்கியத்துவம்:

ரம்ஜான் மாதத்தில், சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு நீடிக்கும் போது, ​​உடல் தலைவலி, பலவீனம் மற்றும் ரத்தச் சர்க்கரைக் குறைவு போன்ற பல பிரச்னைகளை உருவாக்கும். இவற்றைத் தடுக்க, பேரீச்சம்பழத்தில் இஃப்தார் தொடங்குவது நல்லது. ஏனெனில் பேரீச்சம்பழத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நன்மைகள் அதிகம்.

* மாலையில் நோன்பு திறக்கும் போது நோன்பிருப்பவர்களுக்கு உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது. அதை கொடுக்கும்படி பேரீச்சம்பழத்தில் அதிக அளவு இயற்கை சர்க்கரைகள் உள்ளன, அவை கல்லீரலுக்கு விரைவாகச் செல்கின்றன, அங்கு அவை மற்ற உணவை விட விரைவாக ஆற்றலாக மாற்றப்படுகின்றன.

உண்ணாமல் நீண்ட நேரம் இருக்கும் விரதத்திற்குப் பிறகு அதிக அளவு உணவை உட்கொள்வது பட்டினியால் வாடும் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் இஃப்தாரின் போது உண்ணும் உணவு மிகவும் ஹெவியாக இருக்குமென்பதால், உணவை ஜீரணிக்க உதவும் செரிமான சுரப்பு மற்றும் சாறுகளை பேரீச்சம்பழம் வெளியிடும். இதனால் செரிமான அமைப்பைத் தொடங்கவும் அது உதவுகிறது.

Dates

Dates Freepik

* பேரீச்சம்பழம் பசியின் உணர்வைக் குறைக்கிறது.

* பேரீச்சம்பழம் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டின் நல்ல மூலமாகும்.

* வைட்டமின் ஏ, பி6, மற்றும் ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Dates

DatesFreepik

அவை கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதை மாற்றவும், ரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கவும், ஹீமோகுளோபின் மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன.

* உலர் பழங்களுக்கிடையில் பேரீச்சம்பழத்தில் பாலிபினால்கள் அதிக அளவில் உள்ளன. பாலிபினால்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன மற்றும் உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் அகற்ற உதவுகிறது” .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles