
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.
அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.
ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.
இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.