
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆ லாய் விரைவு மீ உணவிலும் இந்தோனேசியாவின் கோழி மணத்திலான இண்டோ மீ உணவிலும் புற்றுநோய்க்குக் காரணமான ethylene oxide (எத்லீன் ஓக்சைட்) ரசாயனக் கலவை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த இரு மீ உணவுகளை உடனடியாக ரத்து செய்வதாக தைவான் அரசு அறிவித்ததோடு அந்த உணவு வகைகளை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு 20 கோடி அமெரிக்க டாலர் அபராதத்தை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தைவானில் பேரங்காடி, அங்காடி மற்றும் அவசரத் தேவைக்கான அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேற்கண்ட ரசாயனக் கலவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.