
🔊To listen to this news in Tamil, Please select the text.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம மற்றும் பக்தி பாதைகளில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமர் கோயிலுக்கு செல்லும் சாலைகளாக இந்த ராம, பக்தி பாதைகள் உள்ளன.
ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. .
இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் மழை நீர் கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.