
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில் திங்கள்தோறும் நடைபெறும் தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு எதிர்வரும் 1.9.2024 ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர், விசுமா துன் சம்பந்தன், டான்சிறி சோமா அரங்கில், காலை மணி 9.30 அளவில் நடைபெறவுள்ளது.
இம்முறை இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் முனைவர் தர்மலிங்கம் நடராசன் அவர்கள் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்புச் செய்திகள் 1 எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
சிவநேயச் செல்வி அகல்யா தர்மலிங்கம் அவர்கள் திருமணத்தில் உறுதி கூறுதலும் பரிசமும் எனும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்துவார். அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் இந்நிகழ்ச்சி வழிகோலாய் அமையும் என்பதில் ஐயமில்லை! சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையோடு தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகிறார்கள். இலவயமாக நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். கூடுதல் தெரிவலுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவிர, மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.