🔊To listen to this news in Tamil, Please select the text.
லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணிக்காக ரோபர்ட் லெவன்டோஸ்கி, பாப்லோ தோரே ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர். மற்றொரு கோலை பெட்ரி அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வில்லாரியல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியுடன் சமநிலை கண்டனர்.