
🔊To listen to this news in Tamil, Please select the text.
கால்பந்து வரலாற்றில் அனைத்து காலக் கட்டத்திலும் சிறந்த வீரராக லியோனல் மெஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து வெளியாகும் கால்பந்து பத்திரிகை மார்கா.
இதன் சார்பில் கால்பந்து உலகின் முன்னணி கால்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு வீரரின் செயல்பாடு, வென்ற கிண்ணங்கள் உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
முடிவில் அனைத்து காலத்திலும் சிறந்த கால்பந்து வீரராக அர்ஜெண்டினாவின் மெஸ்சி தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
மெஸ்சி தனது கால்பந்து வாழ்க்கையில் இதுவரை ஒரு உலகக் கிண்ணம் (2022, அர்ஜெண்டினா), இரண்டு கோபா அமெரிக்கா (2021, 2024, அர்ஜென்டினா), மூன்று கிளப் உலகக் கிண்ணம் (2009, 2011, 2015, பார்சிலோனா), நான்கு சாம்பியன்ஸ் லீக் (2005-06, 2008-09, 2010-11, 2014-15, பார்சிலோனா) உட்பட மொத்தம் 46 கிண்ணங்களை வென்றுள்ளார்.
போர்த்துல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இரண்டாவது இடம் பிடித்தார்.
பிரேசில் ஜாம்பவான், மறைந்த பெலேவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. ஜாம்பவான் மரடோனா நான்காவது இடத்தில் உள்ளார்.