🔊To listen to this news in Tamil, Please select the text.
உடலுக்குள் போதைப்பொருளை வைத்திருந்ததாக ஏழு போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு கொன்டு வரப்பட்ட நிலையில் அக்குற்றங்களை அவர் மறுத்து விசாரணை கோரினர்.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் சுங்கை பட்டாணி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் அவர் குற்றத்தை மறுத்தனர்.
லான்ஸ் கோபரல், சார்ஜன் ஆகிய பதவிகளைக் கொண்ட போலிஸ் அதிகாரிகள் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற நீதிபதிகளான எம்.கலையரசி, கைராத்துல் முன்னிலையில் குற்றத்தை மறுத்தனர்.
முன்னதாக, கோல மூடா, பெண்டாங் ஆகிய காவல் நிலையத்தில் பணிபுரியும் அவர்கள் உடலில் போதைப்பொருள் எடுத்துகொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காலை 4.20 முதல் 7.23 மணிவரை அமான் ஸ்குவேர் எனும் பகுதியில் அவர்கள் இக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.
1952ஆம் ஆண்டு அபாயகரமான போதை பொருள் சட்டத்தின் செக்ஷன் 15(1)ஏ இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரிங்கிட் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் .