11ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15, 16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாநாட்டின் அமைப்பாளரும் தலைவருமான டாக்டர் விஆர்எஸ் சம்பத் இந்த மாநாட்டை தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார்.
உலக நாடுகளில் இருந்து பல முன்னணி வர்த்தகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன் அடிப்படையில் இம்மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு பெரும் பயனாக அமையும் என்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழு துணை தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து தெரிவித்தார்.
குறிப்பாக மலேசியாவில் உள்ள இந்திய சிறு நடுத்தர வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம்செய்யவும் வெளிநாடுகளில் இந்த வர்த்தக திட்டங்கள், முதலீடுகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆக இம்மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்று என்று டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.
முன்னதாக தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன் மலேசிய ஏற்பாட்டாளராக உள்ளார்.
மேலும் தமிழக அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகன் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.
மலேசியாவிற்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி இம்மாநாட்டிற்கு தலைமையேற்கவுள்ளார் என்று மாநாட்டு செயலாளர் விட்டல் கூறினார்.
ஃபார்லிம் குழுமத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் தலைவர் நிவாஸ் ராகவன், டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூர்யா, டாக்டர் கலாநிதி வீராசாமி, அன்சாரி அஹ்மத் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர்.
ஆகவே மலேசிய இந்திய வர்த்தகர்கள் திரளாக வந்து இம்மாநாட்டில் கலந்து பயன் பெற வேண்டும்.
இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு www.economic-conference.com எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம் என்று விட்டல் கூறினார்.