🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர் நவ 9-
சரியாக ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பிபிபி கட்சியின் தீபாவளி பொது உபசரிப்பு இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கோலாலம்பூர் கம்போங் அத்தாப்பில் அமைந்துள்ள பிபிபி கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு கலை கலாசார பாரம்பரிய விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டொமினிக் லாவ், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, பிபிபி கட்சியின் மூத்த உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தனர்.
பிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன்,துணை தலைவர் குமார், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ராசூல் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்ற இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.