30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

முதல் கையெழுத்திலேயே கள்ளக் குடியேறிகளை விரட்டுவேன் – டிரம்ப் சூளுரை

மீண்டும் அமெரிக்க அதிபரானதும், மில்லியன் கணக்கான கள்ளக் குடியேறிகளை நாட்டை விட்டு விரட்டுவதே தனது முதல் வேலையாக இருக்குமென, டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முதலில் குற்றவாளிகள் மீது கை வைப்போம்; அடுத்தடுத்து யாரை விரட்டுவது என பின்னர் முடிவாகுமென, தனது திட்டங்கள் குறித்து NBC News-க்கு அளித்த நேர்காணலில் அவர் சொன்னார்.

எனினும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிறு குழந்தைகளாக இருக்கும் போது கள்ளக்குடியேறிகளாக வந்து அமெரிக்காவிலேயே தங்கி விட்டவர்களை, தொடர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்.

அது குறித்து ஜனநாயகக் கட்சியுடன் தாம் ஒத்துழைக்கவிருப்பதாக டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் சுமார் 4 மில்லியன் குடும்பங்கள் கலப்பு குடிநுழைவு அந்தஸ்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வேளையில், 2021 ஜனவரி 6-ஆம் தேதி வாஷிங்டனில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் அவர் முடிவுச் செய்துள்ளார்.

அவர்களில் பலர் சிறையில் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்; எனவே பதவியேற்ற முதல் நாளிலேயே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கைய்யெழுத்திடுவேன் என்றார் அவர்.

இவ்வேளையில், அமெரிக்காவுடன் வர்த்தம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் வரி விதிக்கப்படும்.

அதே சமயம் அமெரிக்கர்களுக்கு புதிய வரி விதிக்கப்படாது என தம்மால் உத்தரவாதம் எதனையும் கொடுக்க முடியாது என டிரம்ப் சொன்னார்.

ஜோ பைடன் மீதோ அல்லது அரசியல் எதிரிகள் மீதோ பழிவாங்கும் நோக்கில் வழக்குப் போடப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles