30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

சீனாவில் “Half’ மரத்தோன் போட்டி வெற்றியாளருக்கு பரிசாக பசு, மீன், கோழிகள் வழங்கப்படும்

சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஜிலினில் இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் Half Marathon எனப்படும் 21 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியில் அதிகமானோர் கலந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெற்றி பெறுபவர்களுக்கு பசு , மீன்கள், ஆங்சா,வாத்து , சேவல்கள் போன்ற வித்தியாசமான பரிசுகளை வழங்குவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் முன் வந்துள்ளனர். இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக மாடு வழங்கப்படும். பரிசு பெற்ற பண்ணை வளர்ப்பு பிராணியை கொடுத்து ரொக்கமாக மாற்றிக் கொள்ள விரும்புவோருக்கு 6,000 யுவான் அல்லது 827 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டிடாளர்கள் wee chat ட்டில் பதிவிட்டுள்ளனர்.

இரண்டாவது இடத்தை பெறுபவர்களுக்கு சீனாவின் பிரபலமான Taiping குளத்திலிருந்து பிடிக்கப்படும் காட்டு மீன் வழங்கப்படும். மற்ற பரிசுகள் அதே குளத்தில் வளர்க்கப்படும் ஆங்சாக்கள், வாத்துகள், மற்றும் சேவல்களும் வழங்கப்படும். மேலும் இந்த மரத்தோன் போட்டியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையும் வழங்கப்படும்.பெரும் பரிசுகள் காத்திருக்கின்றன. சாம்பியன்கள் மிகவும் பெருமைப்படுவார்கள் என்பதோடு ஏற்பாட்டுக் குழு முழு நேர்மையுடன் இருப்பதாக வீச்சாட் இடுகை கூறியது.பெரிய அளவில் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் Jilin . Nongan வட்டாரத்திலுள்ள Wetland பூங்காவில் இந்த மரத்தோன் போட்டி நடைபெறவிருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles