34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியை தீர்க்க வட்டார அணுகுமுறை – டாக்டர் ராமசாமி

தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியை தீர்ப்பதில் வட்டார அணுகுமுறை கண்ணோட்டம் பெரும் பங்காற்ற முடியும் என பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார். சுங்கை பேராக்கிலிருந்து தண்ணீர் பெறப்பட்டால் பேராக் மட்டுமின்றி பினாங்கின் தண்ணீர் நெருக்கடி பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என அண்மையில் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்த ஆலோசனை ஆக்கப்பூர்வமானது என்றும் ராமசாமி தெரிவித்தார்.முதலில் மாநிலத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என பேராக் நினைப்பதால் சுங்கை பேராக்கிலிருந்து தண்ணீர் பகிர்ந்து கொள்வதை பேராக் விரும்பாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் பேராகில் தண்ணீர் நெருக்கடி சூழ்நிலை உருவாகும் என்றால் பேராக் மற்றும் பினாங்கு ஆகிய இரண்டு மாநிலங்களுமே இந்த பிரச்சனை குறித்து இப்போதே பேச்சு நடத்தலாம்.பல்வேறு மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் உலகளாவிய அணுகுமுறையை சுற்றுப்புற மற்றும் நீர் அமைச்சு மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புற மற்றும் நீர் வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மூடா வட்டார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து கெடா மற்றும் பேரவுக்கான பேச்சாளராக செயல்பட்டு வருவது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக ராமசாமி தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். தண்ணீர் எல்லா இடங்களிலும் இருக்கிறது. மாநிலங்களுக்கிடையே அதனை பகிர்ந்துகொள்வதை தடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles