27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்- 2 வது சுற்றுக்குள் நுழைந்தார் ரிஷி சுனக்

நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர். கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப் பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது. கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பல சுற்றுகளாக வாக்குப் பதிவு நடைபெறும். புதிய பிரதமராகத் தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles