
இன்ஃபிடல் (நாத்திகர்) என்று யாரையும் இழிவுபடுத்த வேண்டாமென அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கோண்டுள்ளார்.
அம்மாதிரியான வார்த்தை பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி இனங்களுக்கிடையே பிரிவினையை உருவாக்கும் என்பதால், பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் அதனைத் தவிர்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் துன் மகாதீர் பாஸ் கட்சியை விமர்சிக்கும்போது, அது பல காலமாக அம்னோவை இன்ஃபிடல் அல்லது நாத்திகக் கட்சி என்று கூறி வந்துள்ள நிலையில், தற்போது அம்னோவுடன் முவாஃபக்காட் நேஷனல் கூட்டமைப்பைப் புதுப்பிக்க முனைப்பு காட்டி வருகிறது.
அது சந்தர்ப்பவாதம் என்றும், எங்கு தனக்கு லாபம் கிடைக்குமோ, அப்போது தனது கொள்கையைத் துறந்து காரியம் சாதித்து வருவதால் பாஸ் கட்சியே நாத்திகக் கட்சி என மகாதீர் குற்றம் சாட்டியிருந்தார்.
