25.5 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

செந்தோசாவில் இனங்களை இணைக்கும் தீபத் திருவிழா!

🔥 Views : 3,894
👁 Reading Now : 49

பல்லின மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒன்றிணைவை கொண்டாடும் வகையில், DUN சென்தோசாவில் “பெஸ்தா தங்லுங் 2026” (தீபத் திருவிழா) கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், செலாங்கூர் மாநில முதலமைச்சரின் சமூக உறவுகள் சிறப்பு அலுவலருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜார்ஜ், இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொள்ளுமாறு DUN சென்தோசா பகுதி மக்கள் அனைவரையும் அன்புடன் அழைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் என்ன உள்ளது?

  • தீபவூர்வலம் (Perarakan Tanglung)
  • கலாச்சார நிகழ்ச்சிகள்
  • கேளிக்கை நிகழ்ச்சி
  • உணவு வவுச்சர்கள்
  • அதிர்ஷ்டச் சீட்டு குலுக்கல்

சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் அழைப்பு: “இந்த அழைப்பை DUN சென்தோசா பகுதி மக்கள் அனைவருக்கும் எனது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியான, இணக்கமான மற்றும் ஒற்றுமை உணர்வு நிறைந்த சூழலில், நாம் அனைவரும் இணைந்து பெஸ்தா தங்லுங் 2026 கொண்டாட்டத்தை சிறப்பிக்கலாம்” என்று டாக்டர் குணராஜ் தனது அழைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

DUN செந்தோசா பகுதி மக்களின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் முன்கூட்டியே தனது நன்றியையும் பாராட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல்கலாச்சார நிகழ்ச்சிகள், மலேசியாவின் பல்லின சமூகத்தை நெருக்கமாக்கவும், ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் ஒரு அழகான தளமாக அமைகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles