
ரஷ்யப் படைகள் யுக்ரைன் மீதான போருக்குத் தயாராகி வருகிறதா என்று மேலை நாடுகளும் யுக்ரைனும் அச்சத்தில் இருக்கின்றன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு யுக்ரைனில் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பிரச்னைகளைக் கிளப்பிய பிரிவினைவாதிகளுக்கும் ரஷ்யா ஆதரவு தந்திருக்கிறது. படையெடுக்கவோ ஆக்கிரமிக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என்று ரஷ்யா கூறிவந்தாலும், அப்படி ஒருவேளை நடந்தால் கடுமையான, நினைத்துப் பார்க்கவே முடியாத தடைகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.
