29.3 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

பொருட்களின் விலையேற்றம் உச்சத்தில்; எதிர்காலம் குறித்து மக்கள் அச்சத்தில்!

🔥 Views : 5
👁 Reading Now : 38

இன்னும் இரு வாரங்களில் பொருட்களின் விலை உயர்வு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் தெரிவித்திருப்பது ஆறுதல் அளித்தாலும், மக்கள் மத்தியில் இது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி சிலாங்கூர் மாநில தகவல் பிரிவித் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார். மலேசிய வர்த்தக உலகில் உயர்வு கண்ட பொருளின் விலை எந்தக் காலத்திலும் இறங்கியதாக வரலாறு இல்லை. சந்தைகளில் விற்கப்படும் மீன், காய்கறிகளின் விலையில் வேண்டுமானால் ஏற்ற இறக்கம் இருக்கலாமேத் தவிர, மற்ற அடிப்படை உணவுப் பண்டங்களில் விலை, ஒருமுறை உயர்த்தப் பட்டால், மறுமுறை எவ்வளவு சாதகமான சூழ்நிலை இருந்தாலும் வர்த்தகர்கள் பொருளின் விலையைக் குறைப்பதில்லை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles