26.8 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

புகையறியா புதிய தலைமுறை
2005-ற்குப் பின் பிறந்தவர்கள் புகைப்பதற்குத் தடை:

🔥 Views : 20
👁 Reading Now : 62

நாட்டில் புகைப்பிடிப்பதைப் பற்றி அறியாத புதிய தலைமுறையை உருவாக்கும்பொருட்டு, 2005-ற்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிப்பதற்கோ, புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கோ, vape என்னும் மின் புகைத்தலுக்கோ தடை விதிக்கும் வகையில் புதியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் புகைப்பழக்கம் உடையோர் அதிகமாக இருப்பதாலும் புற்றுநோய் கண்டு இறப்பவர்களில் 22விழுக்காட்டினர் வெண்சுருட்டு புகைப்பவர்களாகவும் உள்ளனர்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், 17 வயதை எட்டியவர்கள் கடைகளில் வெண்சுருட்டு வாங்க தடைவிதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள கைரி, நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 11 விழுக்காட்டு அளவுக்கு உயர்வு காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles