
ஹராப்பான் கூட்டணிக்கும் மூடா எனப்படும் மலேசிய ஜனநாயக முன்னணிக் கட்சிக்குமிடையிலான ஒத்துழைப்பு முறித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் வலியுறுத்தியுள்ளது.
நம்பிக்கைக் கூட்டணி கருத்திணைக்க அடிப்படையில் பிகேஆர் போட்டியிடும் லார்க்கின் தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ள மூடாக் கட்சியின் நடவடிக்கை கெஅடிலான் மற்றும் நம்பிக்கைக் கூட்டணியுடனான ஒத்துழைப்பை அக்கட்சி மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று கெஅடிலான் சிலாங்கூர் மாநிலத் தகவல் பிரிவுத் தலைவர் ஹலிமி அபு பாக்கார் கூறியுள்ளார்



