
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் முற்று பெற வேண்டிய இப்பணி பல்வேறு தடைகள் மற்றும் இடையூறுகள் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார். இந்த இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணியில் கால்வாய்கள், நீரோடைகள் மற்றும் வழித்தடங்களைச் சுத்தம் செய்வது மட்டுமே முக்கிய நோக்கமாக இருந்தது. எனினும் வெள்ளத்திற்குப் பிந்தைய மரத் தளவாட குப்பை குவிந்து வருவதால் அவற்றை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது என அவர் சொன்னார்.



