29.8 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

லார்க்கின் தொகுதியில் பிகேஆருடன் மோதும் மூடாக் கட்சியின் ஆபத்தான அரசியல் விளையாட்டு!

🔥 Views : 5
👁 Reading Now : 32

அரசியல் களத்தில் சவலைப் பிள்ளையான மூடாக் கட்சிக்கு, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் கன்னி முயற்சியாகும். இந்த நிலையில், வலுவானஅரசியல் தளத்தைக் கொண்டுள்ள பிகேஆர் கட்சியை லார்க்கின் தொகுதியில் எதிர்ப்பது வளர்ச்சி அரசியலுக்கு துணை புரியாது; மாறாக முடாக் கட்சி அத்தொகுதியில் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். தானும் வெற்றி பெறாமல், எதிரணையைச் சேர்ந்த பிகேஆர்-இன் வெற்றிக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் மூடாக் கட்சி, தேர்தலுக்குப் பின் கட்சி ரிதியாக பெரும்பாதிப்பை சந்திக்க நேரலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய அளவில் மூடாக் கட்சிக்கு அவப் பெயரையும் நட்டத்தையும் ஏற்படுத்தும் இந்த முடிவு விவேகமானது அல்ல; லார்க்கின் தொகுதில் நம்பிக்கைக் கூட்டணியின் ஜசெக-வும் அமானாவும் பிகேஆரை ஆதரிக்கும் வேளையில், அத்தொகுதியில் மூடாவும் களம் இறங்குவது பொருத்தமானது அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles