
மூன்றாவது நாளாக உக்ரேன் தலைநகர் கீவ் மீதும், தெற்கேயுள்ள Odesa, வட கிழக்கே உள்ள Kharkiv பகுதிகள் மீதும் ரஷ்யாவால் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வேளையில், உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி, ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாங்கள் போரிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
“நாட்டின் மத்திய பகுதியைக் கைப்பற்ற எதிரிகள் முனைகின்றனர். எனினும் அவர்களின் முயற்சிகளை தாங்கள் முறியடித்து வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் கீவ் நகரை ரஷ்ய வீரர்கள் நெருங்கி வரும் நிலையில், Vasylkiv பகுதியில் உள்ள எண்ணெய்க் கிடங்கு ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் தீப்பற்றி எரிவதாகவும் இதன் விளைவாக நச்சுவாயு காற்றில் கலக்கலாமெனவும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



