
திரங்கானு, கிளந்தான் மாநிலங்களில் வெள்ள நிலைமையும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திரங்கானு மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர் துடைப்பு மையங்களை நாடியுள்ளவர்களின் நேற்றைய எண்ணிக்கை 3,334-இல் இருந்து இன்று 4,335-ஆக உயர்ந்துள்ளது.
1287 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கெமமான், மாரான், பெசூட், உலு திரங்கானு, கோல நெருஸ், டுங்குன், கோலா திரங்கானு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில பேரிடர் நிருவாக செயற்குழு தெரிவித்துள்ளது.
நெருஸ், செத்தியூ, ச்சாலு, பெராங்க், பெசூட் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அதைப்போல, கிளந்தான் மாநிலத்தில் 1,304 குடும்பங்களைச் சேர்ந்த 3,222 பேர் பாசிர் மாஸ், கோல கிராய், தானா மேரா, ஜெனி, பாசிர் பூத்தே பகுதிகளில் உள்ள துயர்துடைப்பு மையங்களை நாடி உள்ளனர்.



