
ஜோகூர் இடைக்கால மந்திரி புசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஹஸ்னி முகமட், தாம் போட்டியிடும் பெனுட் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனை போட்டியை எதிர்நோக்கி உள்ளார்.
அவரை எதிர்த்து பெஜுவாங் கட்சியைச் சேர்ந்த இஸ்காண்டார் நோர் இப்ராஹிம், பெரிக்காத்தானின் செனட்டர் டத்தோ இசா அப்துல் ஹமிட் மற்றும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் கஸாலி ஒத்மான்ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
2008-ஆம் ஆண்டு தொடங்கி இந்த சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று வரும் டத்தோ ஹஸ்னி முகமட் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் 4,447 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



