31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மனதை உருக்கும் போர் அவலம்: பெண்கள், குழந்தைகள் மட்டும் வெளியேற அனுமதி: -ஆண்களை தடுத்து மடக்கும் யுக்ரேனிய அதிகாரிகள்

🔥 Views : 6
👁 Reading Now : 48

யுக்ரேனிய தலைநகர் கீவ் நகரத்தில் ஏவுகணைகள் மழையாகப் பொழிவதால் பொதுமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறி பக்கத்து நாடுகளை தஞ்சம் நாடுகின்றனர்.

ஆனால், யுக்ரேனிய எல்லைப் பகுதிகளில் பெண்களையும் குழந்தைகளையும் எல்லை கடக்க அனுமதித்துவிட்டு, ஆண்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட கணவருக்கு விடைகொடுக்கும் பெண்கள், தந்தை-தாத்தாக்களுக்கு விடைகொடுக்கும் குழந்தைகள் என நெஞ்சை உருக்கும் காட்சிகள் உலக மக்களின் உள்ளத்தை உருக்குகின்றன.

‘ஆண்கள் யுக்ரேனிலேயேத் தங்கி ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட வேண்டும்’ என வலியுறுத்தப்படுவதுதான் இதற்கான காரணம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles