
திரங்கானு மாநிலத்தில் மட்டும் 17ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இன்றையக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட இருக்கிறது. டுங்குன் பாஸ் உறுப்பினர் Wan Hassan Mohd Ramli இது குறித்து கேள்வி எழுப்புவதுடன், வெள்ளத் துயர்துடைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பிரதமரிடம் கேள்வி எழுப்ப இருப்பதாக இன்றைய நாடாளுமன்ற நிரல் குறித்த இணைய தள தகவல் தெரிவிக்கிறது.



