31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

ஜோகூர் தேர்தல்: சிங்கப்பூரில் வசிக்கும் 200,000 ஜோகூர் மக்கள் -அஞ்சல்வழி வாக்களிக்கத் தகுதி

🔥 Views : 3
👁 Reading Now : 26

சிங்கப்பூரில் வசிக்கும் ஏறக்குறைய 200,000 ஜோகூர் மக்கள் அம்மாநிலத் தேர்தலில் அஞ்சல்வழி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தடுப்பூசி விநியோகிப்பை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கை மற்றும் ImmuPlan எனப்படும் செயலியின் பதிவு ஆகியவற்றின் மூலம் இந்த எண்ணிக்கைப் பெறப்பட்டதாக மாநில இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹஸ்னி முஹமட் தெரிவித்தார். சிங்கப்பூரில் பணிபுரியும் 300,000 மலேசியர்களில் 200,000 பேர் ஜோகூரைச் சேர்ந்தவர்கள். மலேசியா-சிங்கப்பூர் எல்லைப்பகுதியில் அமல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி பயணப் பாதை திட்டத்தில் தற்போது குறைவானவர்களே அனுமதிக்கப்-படுவதால், இந்த அஞ்சல் வாக்களிப்பு முறை சிறந்த தேர்வாக அமையும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles