27.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

13 வயது மாணவி மீது கூட்டுத் தாக்குதல்!” – வைரலான வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

🔥 Views : 1,825
👁 Reading Now : 62

கோத்தா கினபாலுவில் 13 வயதுடைய மாணவி ஒருவர் ஐந்து மாணவிகளால் கூட்டாக தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட மாணவி தாக்கப்படும் காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.

கோத்தா கினபாலுவின் தற்காலிக மாவட்ட போலீஸ் தலைவர் சையத் லோட் சையத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மே 23ஆம் தேதி காலை 7.51 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணைகளின்படி, மே 22ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், தாக்குதல் குறித்து தனது குடும்பத்தினரிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட மாணவி மிரட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி ஐந்து மாணவிகளால் தாக்கப்பட்டதாக நம்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின் விளைவாக, மாணவியின் இரு தோள்கள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இடது காதில் காயமும் இடது முழங்காலில் சிறிய காயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles