
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டியிடவுள்ளனர்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
கோல பிலாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.
நெகிரி செம்பிலானில் மொத்தம் 36 தொகுதிகளிலும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 5 இந்தியர்களும் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.
கெஅடிலான் சார்பில் மணிவண்ணன் ஜெராம் பாடாங்கிலும் ராஜசேகரன் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.
இதே போன்று ஜசெக சார்பில் அருள்குமார் நீலாயிலும் வீரப்பன் ரெபாவிலும் முகுந்தன் சிரம்பான் ஜெயாவிலும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



