
நில வெளி, கடல் பரப்பு, வான்வழி யென மூன்று மார்க்கங்களின் மூலம் அதிரடி தாக்குதலை மேற்கொண்ட ரஷ்யா, ஒருசில நாட்களிலேயே யுக்ரேனை வசப்படுத்திவிடும் என்ற தோற்றம் தென்பட்டது. போர்க்களம் பூண்டு ஒரு வாரம் கடந்த பின்னும் இத்தனைக்கும் இடைவிடாத ஏவுகணைத் தாக்குதலை துணைகொண்டும் யுக்ரேனியத் தலைநகர் கீவை ரஷ்யப் படைகளால் நெருங்கமுடியவில்லை. யுக்ரேன் தென்பகுதி நகரான கெர்சானை நேற்றுதான் நகரை ரஷ்யப் படைகள் சூழ்ந்தன. இதனால், புடின், யுக்ரேனியப் படைகளைப் பற்றி தப்புக் கணக்கு போட்டுவிட்டாரோ என்று உலக போர் வல்லுநர்கள் அவதானிக்கின்றனர். அதேவேளை, யுக்ரேன் நாட்டிற்கும் மக்களுக்கும் அதிக சேதம் ஏற்படாமல் போர் நடைபெற வேண்டும் என்று ரஷ்யா கருதுவதால்தான் இந்த நிதானம் என்று வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
