
பினாங்கு-சிங்கப்பூர் இடையிலான VTL வான் வெளிப் பயணம் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கோவிட் தடுப்பூசி ப் போட்டவர்கள் மட்டுமே இதில் முழுமையாக பயணிக்க அனுமதிக்கப்படும். இத் திட்டத்தின் கீழ் பயணிகள் தங்களைத் தனிமைப் படுத்தி க் கொள்ளத் தேவையில்லை என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார். இந்த ப் புதியத் திட்டத்தின் வழி பினாங்கு சிங்கப்பூருக்கு இடையில் நாள்தோறும் நான்கு விமானப் பயணங்கள் மேற்கொள்ள ப்படும். இதற்கான பயண டிக்கெட்டுகள் விரைவில் விற்கப் படுமென போக்கு வரத்து அமைச்சின் சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
