25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு

🔥 Views : 3
👁 Reading Now : 43

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய 2 மாதத்தில் டேவிட் பென்னட் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles