
2019 நவம்பர் 16, தஞ்சோங் பியாய் தேர்தலில் துன் மகாதீர் நிறுத்திய வேட்பாளர் மசீச-விடம் 15ஆயிர வாக்குகள் வேறுபாட்டில் மண்ணைக் கௌவ்வியபோது, முழங்காலில் பந்துகிண்ண மூட்டு பெயர்ந்ததைப் போன்ற நிலைமை மகாதீரின் கட்சிக்கு ஏற்பட்டது;
முதலில் 22 ஆண்டுகள், பின்னர் 22 மாதங்கள் என நாட்டை ஆண்ட மகாதீரின் கட்சி அண்மைய ஜோகூர் தேர்தலில் போட்டியிட்ட 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து பெருத்த அவமானத்தை சந்தித்தது.
தொடர்ந்து அக்கப்போர் அரசியல் நடத்தும் மகாதீர், சொந்த மகனையே 2 முறை மந்திரி பெசார் பதவியில் இருந்து இறக்கிவிட்டவர். அரசியலில், ‘மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் மூலியாக வேண்டும்’ என்ற குறுக்கு மனம் கொண்ட மகாதீரின் பெஜுவாங் கட்சி தொடர்ந்து அரசியல் களத்தில் நின்றாடுமாம்.
அரசியல் பார்வையாளர்கள், இதை சந்து முனை சிந்துபாடியாகத்தான் பார்க்கின்றனர்.
