26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

தே,மு வலுவாக உள்ளதால் அதிகமான கட்சிகள் இணைய ஆர்வம்:
-ஜாஹிட் ஹமிடி கொக்கரிப்பு

தேசிய முன்னணி இப்போது வலுவாக இருப்பதால் அதிகமான கட்சிகள் இதில் இணைய விரும்புவதாக அந்த கூட்டணியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியில் இணைய விரும்பும் கட்சிகளின் பெயரை அம்னோவின் தலைவருமான ஜாஹிட் ஹமிடி வெளியிடவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 222 இடங்களில் 78 தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணி வென்றது. சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த கட்சிகளுடன் கெராக்கான் கட்சியும் கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் தேசிய முன்னணியிலிருந்து விலகின.

தற்போது தேசிய முன்னணியில் அம்னோ, ம.சீ.ச, ம.இ.கா மற்றும் சபாவின் பி.பி.ஆர்.எஸ். ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே உள்ளன என அம்னோ பொதுப் பேரவையில் கொள்கையுரை ஆற்றியபோது அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles