
பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution Ismail-க்கும் உதவித் தலைவர் Rafizi Ramli க்குமிடையே போட்டி ஏற்படலாம் எனத் தெரிகிறது.
Saifuddin போட்டியிட்டால் Farhash போட்டியிடமாட்டார். அவர் Saifuddin பிரச்சாரத்திற்கு உதவலாம் என பி.கே.ஆர் கட்சிக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன. Farhash Wafa Salvador, கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு உதவியாளராக இருந்தவர். கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக Saifuddin இருந்து வருவதால் துணைத்தலைவர் பதவிக்கு அவர் கடுமையான போட்டியை கொடுக்கக்கூடியவராக இருப்பார் என கூறப்படுகிறது.
பி.கே.ர் கட்சியின் தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறுகிறது.



