25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க சீனா மறுப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 68

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு சீனா பொருள் உதவி வழங்கினால், அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானுடன், சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அந்நாட்டிற்கான சீன தூதர் கிங் ஆங், ரஷியாவிற்கு எதிராக சீனா தெரிவிக்கும் கண்டனம் போரை தடுக்க உதவாது என தெரிவித்தார். 
ரஷியா போரை நிறுத்தி போச்சுவார்த்தை மற்றும் தூதர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மட்டுமே சீனா வலியுறுத்தும் என அவர் குறிப்பிட்டார். 
ரஷியாவுடன் அண்டை நாடு என்ற முறையிலும் நட்பு ரீதியிலும் உறவுகளை சீனா விரும்புவதாகவும், ரஷியாவுடன் வர்த்தகம், பொருளாதாரம், நிதி, எரிசக்தி துறைகளில் சீனாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles