25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

வெள்ளத் தடுப்பு திட்டங்கள்:
-சிலாங்கூர் அரசு வெ.770 கோடி ஒதுக்கீடு

🔥 Views : 10
👁 Reading Now : 22

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு 770 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.

கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் பணியையும் உள்ளடக்கிய கிள்ளான் ஆற்று மேம்பாட்டுத் திட்டமும் இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் வகையில் வரையப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக இவ்வாண்டில் 6 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று அமிருடின் ஷாரி ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles