
பிகேஆர் கட்சியில் அண்மையில் நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தல் கட்சிக்கு நேர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், கட்சியில் வலிமையையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கி உள்ளது என்று கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இது, கட்சியின் எதிர்கால பயணத்திற்கும் மக்கள் பணிக்கும் நிச்சயம் உந்துதலை அளிக்கும். நடந்த முடிந்த தேர்தல் நடவடிக்கையை மீளாய்வு செய்து, நிச்சயம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வோம்.
மற்றக் கட்சிகளைப் போல எதையும் மூடி மறைத்துக் கொண்டு கடந்து செல்ல மாட்டோம். காரணம், பிகேஆரில் அனைத்தும் ஜனநாயக முறைப்படியே இடம்பெறும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
