
சத்குரு சித்ரமுத்து அடிகளார் தீபதரிசனம் விழா, ஆன்மிக ஆனந்தத்துடனும் பக்தி உணர்வுடனும் சிறப்பாக நடைபெற்றது. மலேசியா முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து இவ்விழாவை பக்தியுடன் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், நிகழ்ச்சி தலைவராக இருந்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்மாண்புமிகு டாக்டர் குணராஜ் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ஒன்று கூடியது, சமூகத்தின் ஆன்மிக ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
🪔 சிறப்பு நிகழ்ச்சிகள்
இவ்விழாவின் முக்கிய அம்சமாக:
👉 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட H.H. ஸ்வாமி ஆத்மஸ்வரூபானந்த சரஸ்வதி அவர்கள்
👉 ஆன்மிக உபந்யாசம் வழங்கி, பக்தர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆன்மிகத் தூண்டுதலை அளித்தார்
தீபதரிசனம் விழாவில் சுமார் 150 பக்தர்கள் கலந்து கொண்டனர்
முன்னிரவில் நடைபெற்ற விளக்கு பூஜையில் பக்தர்கள் தீபம் ஏற்றி, இருளை அகற்றி ஒளியை வரவேற்றனர்
இந்த நிகழ்வுடன் இணைந்து, அமைப்பின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களும் தொடங்கப்பட்டன.
இதனை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பல்வேறு ஆன்மிக மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தீபதரிசனம் விழா, பக்தி, ஒற்றுமை ஆன்மிக பாரம்பரியம் ஆகியவற்றின் நிலைத்த மகத்துவத்தை வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது



