33.5 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

கனிமவள அமைச்சர் டாக்டர் பிரபு பங்கேற்பில் ஐயப்பன் சிறப்பு பூஜை மற்றும் பக்தர்கள் வழியனுப்பு விழா

🔥 Views : 4,042
👁 Reading Now : 20

புதிய தலைமுறை கேமராமேன் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் சிறப்பு பூஜை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழியனுப்பு விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவருக்கு தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலய சுவாமிகள் சிறப்பு மரியாதை செய்து ஆசீர்வாதம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் பிரபுவின் தந்தையார் துரை கருணாநிதி, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகி சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆன்மிக ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டதுடன், சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு வழியனுப்பு நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் புதிய தலைமுறை கேமராமேன் குமார் மற்றும் புகைப்படக் கலைஞர் முருகன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles