26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

பாரோய் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை – டாக்டர் குணராஜ்

🔥 Views : 3,714
👁 Reading Now : 30

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பாரோய் மாநில சட்டமன்றத் தொகுதியில் (DUN Paroi) போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் அஹ்மத் ஷாஹிர் முகமது ஷாவுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பங்கேற்றார்.

பண்டார் செரம்பான் செலாத்தான் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்களிடம் உரையாற்றிய டாக்டர் குணராஜ், நெகிரி செம்பிலானில் நிலையான, திறமையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவர் தனது உரையில், மாநிலத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அனைத்து இன மக்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் அரசாக பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் YB குனசேகரனும் கலந்துகொண்டு, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாக மக்களிடம் வாக்குகளை கோரினார்.

மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வலுவான ஆதரவை வழங்குவதன் மூலம், நெகிரி செம்பிலானின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles