
மக்களின் நலனுக்காக நிலையான, வலுவான மற்றும் திறமையான நிர்வாகத்தை வெற்றிகரமாக வழங்கி வரும் நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி (Pakatan Harapan) அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது மிகவும் அவசியமானது.
அரசியல் நிலைத்தன்மையே பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அனைத்து இன மக்களும் சமமாக முன்னேறுவதற்கும் அடித்தளமாக அமைகிறது.
கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு, மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் தொடங்கப்பட்டுள்ள முன்னேற்றப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க, வரும் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்.
நாம் தொடர்ந்து ஒற்றுமையை வலுப்படுத்தி, மத நல்லிணக்கத்தைப் பேணி, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, வளர்ச்சியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான நெகிரி செம்பிலானை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.
“நிலையான அரசு… வலுவான பொருளாதாரம்… ஒற்றுமையான சமூகம்… வளமான நெகிரி செம்பிலான்.”



