
முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.
தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது. சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிப் படுத்தப்பட்டது.
குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்குச் சேரலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
