26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

மாட் கீலாவ் விவசாயிகளுக்காக போராடினாரே தவிர தேசியவாதி அல்ல-டாக்டர் ராமசாமி

மாட் கீலாவ் ( Mat Kilau ) விவசாயிகளின் நலன்களுக்காக போராடிய ஒரு தலைவராக இருந்துள்ளாரே தவிர அவர் தேசியவாதி அல்ல என பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்துள்ளார். British காலணித்துவ காலத்தில் பகாங்கில் விவசாயிகளுக்காக போராடிய மாட் கீலாவ் ( Mat Kilau ) வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் பொருளாதார ரீதியில் வசூலில் சாதனை படைப்பதற்காக மிகைப்படுத்தப்பட்ட சில அம்சங்கள் அந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதாக பி.ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். விவசாயிகளுக்கு எதிராக அநீதி ஏற்படும்போது அதனை சரிசெய்வதற்காக British நிர்வாகத்திற்கு எதிராக அவர் போராடியவர் என்பதுதான் உண்மை. ஆனால் திரைப்படத்தில் மாட் கீலாவ் ( Mat Kilau ) குறுகிய சிந்தனைக் கொண்ட தேசியவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பி.ராமசாமி குறிப்பிட்டுள்ளார். அதோடு அப்படத்தில் சீக்கிய ராணுவமும் போலீசும் கொடுரமானவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது. இது நியாயமானதாகவும் இல்லை என அறிக்கையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles