
அரசு நியமித்துள்ள 4 சிறப்புத் தூதார்களின் அலுவல் பயணங்களுக்கு 10 லட்சம் ரிங்கிட் செலவாகியுள்ளதாகவும், 2020 ஜனவரியில் இருந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 923,455.10 ரிங்கிட் செலவிடப்பட்டிப்பதாக நாடாளுமன்றத்தில் கோத்தா கினபாலு எம்பி Chan Foong Hin (சான் ஃபூங் ஹின்) எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலில் அந்த விவரம் கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்), முற்போக்கு ஜனநாயகக் கட்சித் தலைவர் Tiong Kim Sing (தியோங் கிம் சிங்) சீனாவுக்கும், எஸ்யூபிபியின் துணைத் தலைவர் Richard Rio (ரிச்சர்ட் ரியோ), மஇகா தலைவர் எஸ். விக்னேஸ்வரன் தெற்காசியாவுக்கும் சிறப்புத் தூதர்களாக நியமிக்கப்பட்டவர்களாவர்.
