
மாற்றுத் திறனாளியான 57 வயதான T. Ravichandran (டி.ரவிச்சந்திரன்) உலகின் இரண்டாவது உயரம் கொண்ட பாகிஸ்தானில் உள்ள கே2 மலை உச்சியை அடைந்த முதல் மலேசியர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.
இந்த தமது வெற்றியை ஆகஸ்டு 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்திற்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
தமது வெற்றியின் வழி மாற்றுத் திரனாளிகள் கூட முயன்றால் எதனையும் சாதிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
